Thursday, 16 February 2012

யார் நீ?

 

யார் நீ…….?

என் அனுமதி கேளாமல் எனக்குள் வந்தாய்

என்னை அணு அணுவாய் சாகடிக்கிறாய்

என்ன செய்வதென்றே எனக்குப்புரியவில்லை

ஏன் எந்த மாற்றம் என்றும் எனக்குத்தெரியவில்லை

யார் நீ …..?

உன் பார்வைகள் எனக்குள் பளிச்சிடுகின்றது

உன்னைகாண என் இதயம் ஏங்குகின்றது

உன்னோடு நான் எப்போது கை கோர்ப்பேன் -அன்று

உன்னால் மட்டுமே நான் உயிர் வாழ்வேன்

நீ பறித்த ஒரு பூ!

 

நீ என் இதயத்தை

பூ என்று சொன்னாய்!

புரியவில்லை அன்று!

புரிந்துகொண்டேன் இன்று!

நீ என் இதயத்தை

பறித்து சென்ற போது!

உன்னை விட நான் அழகில்லை….?


கார் மேகமும்

கரும நிற – உன்

கூந்தலை கண்டு

காரணமில்லாமல் களைந்து

போகும்….!

சுட்டெரிக்கும் சூரியனும்

சுட்டு விழி – உன்

பார்வையை கண்டு

சுருண்டு சுருண்டு

குளிர்த்து போகும்…!

வெட்ட வெளி வெண்ணிலவும்

வெகிளி தனமுள்ள – உன்

அழகை கண்டு

வெளுத்து போகும்….!

ஏழு வர்ணம் பூசிய வானவிலும்

ஒரு வர்ணம் உள்ள – உன்

புருவத்தை கண்டு

தனித் தனியே பிரிந்து போகும்….!

பறந்து திரியும் பட்டாம் பூச்சியும்

திறந்து மூடும் – உன்

இமையை கண்டு திசை

தெரியாமல் தொலைந்து போகும்….!

பூத்து குலுங்கும் பூக்களும்

புதியதாய் பூத்த – உன்

புன்னகையை கண்டு

எகிறி குதித்து

புதைந்து போகும்…!

அலைந்து அலைந்து அடிக்கும் கடலையும்

ஒளிந்து இருக்கும் – உன்

வெட்கத்தை கண்டு

உறைந்து உறைந்து

வற்றி போகும்…!

விஸ்வருபம் எடுக்கும் புயலும்

மௌனங்கள் வெடுக்கும் – உன்

வார்த்தையை கண்டு

மெது மெதுவாய்

அடங்கி போகும்…!

வளைந்து நெளிந்த வயல் வெளியும்

அசைந்து பிசைந்த – உன்

இடையை கண்டு

சரிந்து சரிந்து

செத்துப் போகும்…!

படர்ந்து விரிந்த புல்வெளியும்

நடந்து சென்ற – உன்

பாத சுவற்றை கண்டு

சட்டென்று பட்டுப் போகும்…!

Wednesday, 15 February 2012

வெளிச்சம் ...

 
 





தெருவோர குருட்டு பெண்ணிடம்
முறைகேடாய் நயவஞ்சகன் ..
தறிகெட்ட அச்செயலால்
நிறைகுடமாய் முன் வயிறு ..
இருந்தும் அவளுக்குள் ஆனந்தம்
இனி கை பிடித்து தன்னை
நடத்தி செல்ல
உலகின் வெளிச்சம் தனக்கு தந்திட
தொப்புள் கொடி உறவு வருமென்று
மகப்பேருக்காய் காத்திருந்தாள்
மங்கை அவள் ..
கறுப்பு வெள்ளை கனவுகளோடு
~அன்புடன் யசோதா காந்த் ~

Punnagaiyin Vali…

 

Kanner Sindhum

Kangalin Valigalai Vida…

Punnagai Seiyum

Ithazhgalukke

Vali Athigam!!!!!

Kavithai Sent by S.Sowmya….

Why this kolavery di !!!

 
Husband: Innaikku oru karupu naaiku soru vachiya.?
Wife: Aamanga eppadinga kandu pidichinga.?
Husband: theruvorama sethu kidakku, adan keten...


Tuesday, 14 February 2012

திருமண நாள் ...

 
 








இன்று ஏனோ
புதிதாய் கவிதைகள்
ஒன்றும் வரைய வில்லை
என் திருமண நாள் என்பதாலோ
மனம் பின்னோக்கி பறந்தது
என் வாலிப வயதும்
என் கணவரை காதலித்ததும்
காதலில் நாங்கள் மகிழ்ந்ததும்
பெற்றோரை எதிர்த்து
திருமணம் செய்ய துணிந்ததும்
என்னவரின் உறவினர்கள்
கலந்து ஆலோசித்தபின்
ஊரறிய திருமணம் ஆனதும்
எல்லாம் நேற்று நடந்தது போல்
ஓடிவிட்டது ..
முத்தான பதினேழு வருடங்கள்
அழகாய் இரண்டு குழந்தை செல்வங்களும்
நன்றி இறைவா
நாளும் நான் மறவேன்
வணங்குகிறேன்
வாழ்த்துங்கள் ...

~அன்புடன் யசோதா காந்த் ~

விழிகளே ....

 
 





எனது விழிகளே
பலமுறை வேண்டியும்
பயனில்லை உங்களிடம்
மனதின் மர்மங்களை
அம்பலபடுத்தும் ஆயுதங்களே
அடிமைபோல் கேட்கிறேன்
உணர்ச்சிகளை உள்ளுக்குள்
வையுங்கள் ..

நான் காதலில் தோற்கவில்லை
கவலைகள் எனக்கில்லை
பயம் என்பது என்னில் இல்லை
பகைமையோ எனக்குள் இல்லை
பிரிவுகள் கருதி கலங்குவதுமில்லை
இத்தனையும் காட்டாது
இமை மூடி கொள்ளுங்கள் ..
வலிகள் பலவகை வருவினும்
விழிநீர் வடிக்காதீர்கள்
விசும்பலுடன் விண்ணபிக்கிறேன்
எனது விழிகளே ...
~அன்புடன் யசோதா காந்த் ~

Monday, 13 February 2012

நான் கூட காதலிக்கிறேன்...!

 
 
காதல்...
இன்று புன்னகையோடு வரும்,
நாளை கண்ணீர் சிந்தவைத்து ஓடிவிடும்
என்றே நினைத்தேன்.
 
காதல்...
சீச்சீ, கெட்ட வார்த்தை
அது எனக்கெல்லாம் ஒத்து வராது
என்றே கர்வமாக இருந்தேன்.
 
காதல்...
அப்படி என்றால் என்ன?
நானாவது, காதலிப்பதாவது
என்று எகத்தாளமாகப் பேசினேன்.
 
காதல்...
வேண்டாமடா இந்த தொல்லை என்று
ஆண் வர்க்கத்தை விட்டே விலகியேயிருந்தேன்.
 
ஆனால் அந்தக் காதல் என்னையும் ஒருநாள் தீண்டியது..
 
சண்டைக்கோழியாய் சீறச் சென்ற நான்
அவனைப் பார்த்து சாந்தமானேன்.
ஏன் அப்படி அடங்கினேன்..?
 
முதலில் தெரியவில்லை அந்த உணர்வுக்கு பெயர் என்னவென்று?
அவன் சொல்லித்தான் தெரிந்தது...
அது தான் காதல் என்று.
 
கடைசியில் வென்றது காதல்தான்...
காதலை வெறுத்த நானும்
இன்று காதலில்...

காதலர் தினம் ....

 
 








பூக்களும் காதல் பரிசுகளும்
குவிந்து கிடக்க

வாழ்த்துவோரும் வழங்குவோரும்
குழுமி இருக்க

நாகரீக காதலரோ
ஆடி பாட

கிராமத்து காதலரோ
திரை அரங்கு கோயில்குளம் தேட


புதிதாய் பூத்த காதலரோ
தவி தவிக்க

காதலில் வெற்றி கண்டவரோ
பெருமை கதை பேச

காதல் தோல்வி கொண்டவரோ
பார்க்கும் ஜோடிகளை வசை பாட

இனிதே தொடரட்டும்
இனிய காதலர் தினங்கள்

இன்புற வாழட்டும்
உண்மை காதலர்கள்

~அன்புடன் யசோதா காந்த் ~

இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!


அந்த மின்னலின் வேகத்தில்

இதய சொந்தமானவளே,

சொக்கும் விழிப் பார்வையின்றி

மனதால் சொக்குப் பொடி போட்டவளே;

மிச்சமுள்ள ஆசைகளில்

மொத்தமாய் பூத்தவளே,

மூன்று கடல் தாண்டி நின்றும்

காதலால் இதயத்தில் அறைந்தவளே;

காலதவம் பூண்டெழுந்து

பரிசிட்ட பெண்விளக்கே,

கவிதை நெருப்பென பொங்கி

இதயத்தை உணர்வுகளால் சுட்டவளே;

மூச்சுக்கு முன்னொரு முறையேனும்

சுவாசத்தில் வசிப்பவளே,

எனக்கு இதய வாசல் கதவு திறக்க

இணையத்தில் வந்தவளே;

நட்புக்கு சக்கரை போட்டு

காதலாய் திரித்தவளே,

கெட்டுப் போகாத உன் குணத்தால

மனசெல்லாம் கெடுத்தவளே;

குண்டு குண்டு கண்ணாலே

மின்னஞ்சலில் படமனுப்பி மிரட்டியவளே,

யாரும் விரட்டாத அன்பெடுத்து

கைகோர்க்கத் துடிப்பவளே;

கற்கண்டு தேனாட்டம்

கனவு கூட இனிக்குதடி,

நீ கூடி வாழும் நாளுக்குத் தான்

வாழ்க்கை சொர்க்கமாய் கனக்குது;

மாலை மாத்தும் நாலு இதோ

இப்போ கூட போகுதேடி,

இனிமேலும் தயக்கமென்ன

ஓடிவந்து கட்டிக்கடி!! உயிரெல்லாம் பூத்துக்கடி!

யாரையும் நோகாத கனவுகள்..

 

வலிக்காமல்

சலிக்காமல்

நினைவுகளிலிருந்து அற்றுப் போகாமல்

நிஜம் பூத்த மலர்களின் -

வாசம்தொடும்,

வரலாறாய் மட்டும் மிகாமலும்,

முன்னேற்றப் படிக்கட்டுகள் நிறைந்த

பல்லடுக்கு மாடிகளின் முற்றத்தில் -

மல்லிகைப் பூக்க,

ஒற்றை நிலாத் தெரிய,

மரம் செடி கொடிகளின் அசைவில் -

சுகந்தக் காற்று வீசும் -

தென்றல் பொழுதுகளுக்கிடையே

வஞ்சனையின்றி -

உயிர்கள் அனைத்தும் வாழ

யாரையும் நோகாமல் ஒரு – கனவேனும் வேண்டும்!!

தாய்ப்பாசம்

 

அவள் ஓடிப்போனாள்…

அம்மாவும், அப்பாவும் கூடி

அழுதார்கள்

அப்போதும் கூட

'என்மகள்' என்று

தான் அம்மா சொன்னாள்.

Sunday, 12 February 2012

பூங்காற்று ...

 
 
 



வல்லரசுகள் இரண்டும்
மோதிகொண்டும்
கூட்டணி சேர்ந்துகொண்டும்
இடியும் மின்னலும் இல்லறத்திலேயே

வீட்டில் ஒளி தரும் தீபங்களோ
நிம்மதி விளக்கினை
அணைக்கும் முயற்சியிலே
அடக்கும் முயற்சியில் மாமியார்களும்
சுதந்திரம் பேசிக்கொண்டே மருமகள்களும்
தன் இளமை பருவம் மறந்த பெரியவர்கள்
தன் தாயின் முதுமையை மறந்த சிறியவர்கள்

தலைமுறை தலைமுறையாய்
தொடரும் குடும்ப பூகம்பங்கள்
மகளாய் மருமகளையும் தாயாய் மாமியாரையும்
எண்ணும் இல்லத்திலே என்றும் வீசுமே
மணமுள்ள பூங்காற்று ...
~ அன்புடன் யசோதா காந்த் ~

Kadarkkarai mannalil

 
 

Kadarkkarai mannalil
Namadhu kaadal
Yezhudhi Vaiththean…
Alai vandhu adiththu sendradhu –
'Vilai Madhipillaa
Muthukkal' Yenakkey Sondham yendru.!.


Love kavithai

 
 

Irulai nesi, vidiyal therium..
Thoolviyai nesi, vetri therium..
Ulaippai nesi, uyarvu therium..
Unnaiaye nee nesi ulagam unakku purium…


Nee Mattumthan!!!

 
 

Ennai adikkamal
azha vaippadhu
Nee Mattumthan!!!
Ennai Kayapaduthamal
Valigal tharuvadhu
Nee Mattumthan!!!
Ennai verukkamal
vedhanai paduthuvadhu
Nee Mattumthan!!!
Ennai sidhaikkamal
sithiravadhai seiadhu
Nee Mattumthan!!!
Naan vazhndhalum
Veezhndhalum
ennodu iruppadhu
Nee Mattumthan!!!


Superb love kavithai

 
 

Kannkal…
Parvaiyai Thirudina!!!
Udhadugal…
Punnagaiyai Thirudina!!!
Ennam…
Varthaigalai Thirudina!!!
Kavithaigal…
Mozhiyai Thirudina!!!
Anbe!!!
Ennai Neeyum…
Unnai Naanum…
Thirudi Kondom!!!
Nam Idhayangalai
Thirudiyadhu…
Kadhal!!!
Ulagame..!
unnai veruthalum unnai nesika
Naan irukiren
Ennai engum thedathe
Naan un idayathil irukiren... -


கனவுகளே .....

 
 
 



இரவுகள் தோறும் எண்ணிலா கனவுகள் ...


புரியாத இன்பம் தரும் கனவுகள்
அறியாத துக்கம் தரும் கனவுகள்

மோகினி பேய்களுடன் கைகோர்க்கும் திகில் கனவுகள்
பகைமை உணர்த்தும் பழிக்குப் பழி கனவுகள்

காதலை அள்ளி தெளிக்கும் காதலான கனவுகள்
உணர்வுகளை தூண்டும் காம கனவுகள்

பொன்னும் பொருளும் கண்டு மயங்கும் ஆசை கனவுகள்
பாம்பும் தேளும் ஊரும் கோர கனவுகள்

பிரிந்த சொந்தங்கள் சேரும் பாச கனவுகள்
ஏதேதோ முகமுடி இட்ட வேசகனவுகள்

குழந்தையாய் மனம் மகிழும் அற்புதகனவுகள்
உயிர் போகும் வலியுள்ள மரணகனவுகள்

விடிந்ததும் ...

மாறாமல் மனதில் நிலைத்திருக்கும் சில கனவுகள்
நினைத்து பார்த்தும் நினைவில் வராத பல கனவுகள்

~அன்புடன் யசோதா காந்த் ~

ஒரு SMS ஜோக் !

 
 
தந்தை : ஏண்டா ரொம்ப நேரமா அழுதுகிட்டிருக்கிறே?
மகன் : அம்மா அடிச்சிட்டாங்கப்பா...
தந்தை : சீ ..சீ...இதுக்கெல்லாம் இப்படியா அழுவாங்க ...
மகன் : அட போங்கப்பா நீங்க எவ்வளவு அடி பட்டாலும் தாங்கிடுறீங்க ...என்னால முடியல ...
தந்தை : சரி ...விட்றா...விட்றா ...பக்கத்துல யார் காதுலயும் விழுந்திடப் போகுது .

Popular Posts