கோழிக்குஞ்சு ஏன் தெருவைக் கடந்து சென்றது என்ற கேள்விக்கு இவர்கள் அளித்த பதில்:
இந்திய வெளியுறவுத்துறை:
தெருவைக் கோழிக்குஞ்சு கடக்காவிடின் சீனா கடந்துவிடும்.
அமெரிக்க வெளியுறவுத்துறை:
கோழிக்குஞ்சை பாதுகாப்பாக தெருவைக் கடக்க இரண்டு பக்கமும் வரும்வாகனங்களை நிறுத்த வேண்டும்என ஒரு தீர்மானத்தை நாம் ஐநா மனித உரிமைக்கழகத்தில் கொண்டுவர இருந்தோம். இந்தியாவுடனான கேந்திரோபாய நட்புறவைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் நிர்ப்பந்தத்தின் பேரில்வாகனங்களை நிறுத்த வேண்டும்என்றபதம் நீக்கப்பட்டுவிட்டது.
கருணாநிதி:
அந்தப் பக்கம் டெசோ மாநாடு நடப்பதால் அது கோழிக்குஞ்சுக்குப் பாதுகாப்பான இடம். தேர்தலுக்குப் பின்னர் கழகக் கண்மணிகளுக்கு கோழி சூப் இலவசமாக வழங்கப்படும்.
ஞானதேசிகன்: தேர்தலில் காங்கிரசு தனித்துப் போட்டியிடமுடிவு செய்துள்ளது அதனால் கோழிக்குஞ்சு தெருவைக்கடந்தது.
சூனா சுவாமி: இந்தப் பக்கம் porkis இருக்கிறாள்.
ப சிதம்பரம்: காங்கிரசை யாரும் தனிமைப்படுத்த முடியாது என்பதைகோழிக்குஞ்சு உணர்ந்து கொண்டதால் அது தெருவைக் கடந்து செல்கின்றது.
கோத்தபாய ராஜபக்ச: அது ஒரு ஆயுதமேந்திய பயங்கரவாதி. It is a legitimate target to be attacked and destroyed. அதனால் கோழிக்குஞ்சு தெருவைக்கடக்க முன்னர் கொல்லப்படவேண்டும்.