Saturday 5 January 2013

தமிழ் சுவாசம்

ஒரு காகிதம்
ஒரு எழுதுகோல்
என் தமிழ் நீ
என்னோடு இருந்தால் போதும்
எப்போதும் சுகமாய் வாழ்வேன்!
-
தமிழே!
என் இனிய கனவுகள் இதோ!
எங்கே? யாரோ? கண்டறிந்ததை
நாம் படித்தது போதும்
இனி நாம் கண்டறிவதை
உலகெலாம் படிக்கச் செய்வோம்!
-
நம் வீட்டு அலமாரியில்
ஷேக்ஸ்பியர் புத்தகம்
இருப்பது போல்
மேற்கத்திய வீட்டு அலமாரியில்
திருக்குறள் புத்தகம் இருக்கட்டும்!
-
எப்போதாவது
ஆங்கலப் பாடல்களை நாம்
முணுமுணுப்பது போல்
பாரதி பாடல்கள்
மேற்கத்தியன் முணுமுணுக்கட்டும்!
-
வெடித்த பூமிக்கு வியர்வை கொண்டு
தாகம் போக்கும் தமிழ் விவசாயியின்
கிராமியப் பாடல்கள்
மேற்கத்திய வீட்டு
குளு குளு அறையின்
ஒலி நாடாக் கருவியில்
ஒலிக்கட்டும்!
-
‘மம்மி’கள் நிறைந்த
எகிப்து முதல்
‘கும்மி’கள் நிறைந்த
அமெரிக்கா வரை
மேறகத்திய குழந்தைகள்
பெற்றவளை ‘அம்மா’
என்றே அழைக்கட்டும்!
-
புதிய தமிழ்தேசம் படைப்போம்
பூமிக்கெல்லாஈம்
தமிழ் வாசம் கொடுப்போம்!

வெற்றியின் ரகசியம்

 வெற்றி தலைக்கு ஏறக்கூடாது...

தோல்வி மனசுல தங்க கூடாது...

இதுதான் வெற்றியின் ரகசியம்.....

Friday 4 January 2013

காதல்

கவிதை எழுத நினைத்தேன் -அனால்
என் நினைவில் வந்ததோ உன்பெயர்தான்
உன்பெயரில் உள்ள ஒவ்வொரு
எழுத்தும் கவிதை தானே அன்பே!

ஹைக்கூ

துடிப்பதை விட
உன்னை நினைப்பதற்கு
நேரம் சரியாக இருக்கிறது
என் இதயத்திற்கு .....

அர்த்தம் அற்றது !?

 தேவையான நேரத்தில் காட்டப்படாத அன்பு !!
பின்பு , ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து வந்தாலும்
அர்த்தம் அற்றது !?

உழவின்றி உலகில்லை...!!

(பொங்கல் கவிதை போட்டி) 

எங்கெங்கு காணினும் உழவு என்றொரு காலம்,
செங்குருதி வியர்வை சிந்தி ஏர் உழவு செய்து
உலகை சுழல வைத்தவன்
உழவன் எனும் தன்னலமற்ற இறைவன்..!!

பயிர்த்தொழில் மட்டுமே உயிர்தொழில்,
அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிரு என
உயிரை உரமாக்கி உழவு செய்தவன் உழவன்..!!

ஆடிப்பட்டம் தேடி விதைத்து,
ஆவணியில் முளைப்பு பார்த்து,
எப்போதும் முப்போகம் தந்த பூமித்தாய்க்கு
உழவும்,உழவனும் செல்லபிள்ளைகளே..!!

வெண்கொற்றகுடை அரசனும்,
தங்க ஆடை தரித்த செல்வந்தனும்,
வீடு,பேறு என முற்றும் துறந்தவனும்,
உழவனின் உழவாட்சிக்கு அடிமையே..!!!

ஏரை நம்பி ஏட்டறிவை விட்டதாலோ என்னவோ,
தன் வியர்வையில் அறுவடை செய்து,
உயிரை கூறிட்டு உலகிற்கு சோறு போடுகிறான்..!!

அந்நியனுக்கு அடகு வைக்கப்படும் மனித அறிவு,
உழவனின் வியர்வைக்கும்,உழவுக்கும்
என்றுமே மண்டி இடும்..!!

உழவனின்றி அழகிய உழவில்லை,
உழவின்றி புதிய உலகில்லை..!!!

நம்பிக்கை

விரல் பிடித்து கூட்டி செல்வாய்
என்று நம்பி தான்
 உன்னுடன் வந்தேன் ...
விலகி செல்வாய் என்று
 தெரிந்து இருந்த்தால்
 விட்டு இருப்பேன்
 உன் விரலை அல்ல என் உயிரை ...

பிரிந்து விடுவாய் என்பதற்காக அல்ல !!

நீ கூறுவது பொய் என தெரிந்தும்
பொறுத்து கொண்டேன் !!
நீ பிரிந்து போய் விடுவாய் என்பதற்காக அல்ல !!
என்றாவது என்னை புரிந்து கொண்டு
விடுவாய் என்பதற்காக !!!

இமை திறந்து....

இணையத்
துடிக்கும்
இரு இதயங்கள்
இங்கே
இமைகள் திறந்து
இரவுகளை
துரத்திக்கொண்டு
வாழ்கிறது.....!

Popular Posts