Friday, 4 January 2013

அர்த்தம் அற்றது !?

 தேவையான நேரத்தில் காட்டப்படாத அன்பு !!
பின்பு , ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து வந்தாலும்
அர்த்தம் அற்றது !?

உழவின்றி உலகில்லை...!!

(பொங்கல் கவிதை போட்டி) 

எங்கெங்கு காணினும் உழவு என்றொரு காலம்,
செங்குருதி வியர்வை சிந்தி ஏர் உழவு செய்து
உலகை சுழல வைத்தவன்
உழவன் எனும் தன்னலமற்ற இறைவன்..!!

பயிர்த்தொழில் மட்டுமே உயிர்தொழில்,
அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிரு என
உயிரை உரமாக்கி உழவு செய்தவன் உழவன்..!!

ஆடிப்பட்டம் தேடி விதைத்து,
ஆவணியில் முளைப்பு பார்த்து,
எப்போதும் முப்போகம் தந்த பூமித்தாய்க்கு
உழவும்,உழவனும் செல்லபிள்ளைகளே..!!

வெண்கொற்றகுடை அரசனும்,
தங்க ஆடை தரித்த செல்வந்தனும்,
வீடு,பேறு என முற்றும் துறந்தவனும்,
உழவனின் உழவாட்சிக்கு அடிமையே..!!!

ஏரை நம்பி ஏட்டறிவை விட்டதாலோ என்னவோ,
தன் வியர்வையில் அறுவடை செய்து,
உயிரை கூறிட்டு உலகிற்கு சோறு போடுகிறான்..!!

அந்நியனுக்கு அடகு வைக்கப்படும் மனித அறிவு,
உழவனின் வியர்வைக்கும்,உழவுக்கும்
என்றுமே மண்டி இடும்..!!

உழவனின்றி அழகிய உழவில்லை,
உழவின்றி புதிய உலகில்லை..!!!

நம்பிக்கை

விரல் பிடித்து கூட்டி செல்வாய்
என்று நம்பி தான்
 உன்னுடன் வந்தேன் ...
விலகி செல்வாய் என்று
 தெரிந்து இருந்த்தால்
 விட்டு இருப்பேன்
 உன் விரலை அல்ல என் உயிரை ...

பிரிந்து விடுவாய் என்பதற்காக அல்ல !!

நீ கூறுவது பொய் என தெரிந்தும்
பொறுத்து கொண்டேன் !!
நீ பிரிந்து போய் விடுவாய் என்பதற்காக அல்ல !!
என்றாவது என்னை புரிந்து கொண்டு
விடுவாய் என்பதற்காக !!!

இமை திறந்து....

இணையத்
துடிக்கும்
இரு இதயங்கள்
இங்கே
இமைகள் திறந்து
இரவுகளை
துரத்திக்கொண்டு
வாழ்கிறது.....!

Wednesday, 26 September 2012

காதல் செய்த மாயம்

காதல் செய்த மாயம்
என்னவோ தெரியவில்லை 
இப்பொழுத்தெல்லாம் 
நான் சொல்லும் விஷயத்தை
கேட்க மறுக்கிறது -- என் இதயம் 
எல்லாம் காதல் செய்த மாயம் !

Popular Posts