Thursday, 8 August 2013

அவளதிகாரம் - - கவிதைகள்

கருவிழிகளில்
காந்தம் வைத்து
வட தென் துருவங்களாய்
இடம் வலம் புருவங்களில்
பருவமும் சேர்த்து
எனை ஈர்த்துவிட்டாய்

இலையில் விழுந்த
மழைத்துளியாய் என்
வேர்வரை இறங்கிவிட்டாய்

வேர்கள் உறிஞ்சிய
சிறுத்துளியாய்
இலைக்கும் ஜீவன் ஊட்டிவிட்டாய்

வன்மம் கொண்ட உலகில்
ஒரு ஜென்மம் இழந்து இறந்தேன்

இரண்டாம் கருவறை உன்
இமைகளில் தந்தாய்
மறு ஜென்மம் மகிழ்ந்து பிறந்தேன்

சிந்தைக்குள் காதல்
சந்தை போடுகிறாய்

மந்தையாக நுழைந்து
விந்தை பல காட்டுகிறாய்

ஈஸ்ட்ரோஜனின் ப்ரியம் காட்டி காட்டி என்
எக்ஸ்ட்ரோஜனின் வீரியம் கூட்டுவிட்டாய்

மதியெல்லாம் நிறைந்த உன்னை
சதியென்ன செய்தேனும் என்
கதியாக செய்திடணும்  

No comments:

Post a Comment