ஒரு ஹெச்.ஆர். எக்ஸிக்யூடிவ் பொண்ணு இறந்து எமலோகம் போனாங்களாம்.
அங்க எமதர்மன் "வாழ்த்துக்கள் நீங்க சொர்க்கம் போக தகுதியானவங்க ஆனா
அதுக்கு முன்னாடி ஒரு நாள் சொர்க்கத்திலயும் ஒரு நாள் நரகத்திலயும்
தங்கணும் அப்புறம் சொர்க்கமா நரகமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கலாம்"னார்.
அவங்க "இல்ல நான் இப்பவே சொர்க்கமே போறேன் எதுக்கு நேரத்த வேஸ்ட் பண்ணனும்?"னாங்க.
அவர் "இது இங்க ரூல்ஸ் நீங்க ஃபாலோ பண்ணித்தான் தீரனும்"ங்க... அவங்களும் முதல்ல நரகம் போயி ஒரு நாள் தங்க முடிவு பண்ணி போனாங்க.